• Login / Register
  • மேலும்

    பூச்சி மருந்தால் கருகிப்போன காலிஃப்ளவர் செடிகள்!

    பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகள் முற்றிலும் கருகிப்போயுள்ளது.

    அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையத்தில் திருமூர்த்தி (73) தனது தோட்டத்தில் காலிஃப்ளவர் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடி முற்றிலும் கருதி நாசமாகியதால், வேதனையடைந்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது- எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் சுமார் 6 ஆயிரம் காலிஃபிளவர் நாற்றுக்கள் பயிரிட்டிருந்தேன். 90 நாளில் சாகுபடி ஆகும் காலிஃபிளவர், பயிரிட்டு 60 நாளை கடந்ததும் செடியில் புழு விழுந்தது. உடனடியாக, காலிஃப்ளவர் செடியின் இலைகளை பறித்துக் கொண்டு, ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியார் பூச்சி மருந்து கடைக்கு சென்று விபரம் கூறி பூச்சி மருந்து வாங்கி வந்தேன். 

    ஆனால் அந்த மருந்தை வாங்கி வந்து தெளித்த 4 நாள்களுக்குள் செடி அனைத்தும் கருகி விட்டது.  காலிஃப்ளவரும் அடுத்த கட்ட வளர்ச்சி அடையவில்லை. 6 ஆயிரம் நாற்றுகள் பயிரிட்டதில், ஆயிரம் காலிஃப்ளவர் கூட மீதமாகது. ஒரு காலிஃப்ளவர் ரூ.40 க்கு வியாபாரிகள் தோட்டத்திலேயே வந்து கொள்முதல் செய்வார்கள். இப்படி பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால், செடிகள் அத்தனையும் கருதி, ரூ.2 லட்சத்துக்கு மேல் வீணாகியது. 

    இதுபோல வேறு எந்த விவசாயியும் பாதிக்கக்கூடாது. இது குறித்து வேளாண்மை துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 


    Leave A Comment