• Login / Register
  • மேலும்

    ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி  வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கி இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. கடந்த கூட்டத்தை போலவே இந்த கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக  ஆர்பிஐ கவர்னர் அறிவித்துள்ளார். 

    ஆர்பிஐ ஏப்ரல் மாத கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது.

    ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என MPC குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்துள்ளனர். சந்தை கணிப்புகள் படியே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் இந்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதம் உயராது. இதனால் EMI தொகையில் மாற்றம் இருக்காது.

    இந்திய வங்கி அமைப்பில் பணபுழக்கம் உபரியாக உள்ளது, 2000 ரூபாய் நோட்டுகளின் டெபாசிட் மூலம் இது கூடுதலாக அதிகரித்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும் ஊரக பகுதியில் டிமாண்ட் அதிகரித்து ஊரக வளர்ச்சி பாதையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

    2024 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தான் இருக்கும் என்றும் 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
     

    Leave A Comment