• Login / Register
  • மேலும்

    காலை நேரத்தில் பழங்கள் சாப்பிடலாமா..?

    நாம் உண்ணும் உணவுவகைகள் சத்துக்கள் நிறைந்ததாகவே இருந்தாலும் அவற்றினை எடுத்துக்கொள்ளும் முறையும் நேரமும் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

    முக்கியமாக பழங்கள் என்று எடுத்துக்கொண்டால், பழ வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவைகளை சாப்பிடுவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. விரும்பிய நேரமெல்லாம் பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்காது. 

    உடல் நல பிரச்சினைகள் எதுவும் இல்லாதவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். நமது உடல் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சுக்களை நீக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் நிறைய கொழுப்பு சத்து அல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடுவது நச்சுக்களை நீக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். 

    மற்ற உணவுகளை விட பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. காலை வேளையில் பழங்களை சாப்பிடும்போது அதில் இருக்கும் இயற்கையான சர்க்கரையானது வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும். காலையில் எழுந்த உடனேயே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். அதனை உட்கொள்வது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க தூண்டும்.



    ஆனால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள்  போன்ற பழங்களை சாப்பிடலாம்.
     
    மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எளிதாக செரிமானம் நடைபெறவும் உதவி  புரியும். முலாம் பழம், அன்னாசி பழம், மாதுளை பழம், ஆப்பிள், மாம்பழம், பெர்ரி வகை பழங்களை அப்போது சாப்பிடலாம்.
     
    பழங்களை காலை உணவாக உண்பதால், உடலுக்கு வேண்டிய ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆதரவு முழுமையாக கிடைக்கும். காலை உணவாக ஜூஸ் குடிக்க நினைத்தால், பெர்ரி பழங்கள் மற்றும் திராட்சையுடன் தயிர் சேர்த்து அரைத்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடியுங்கள்.
     
    எடையைக் குறைக்க டயட்டில் உள்ளவர்கள், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் பெர்ரி பழங்கள் மற்றும்  வாழைப்பழங்களை சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
     



    Leave A Comment