ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
நேற்று 61இ872.62 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது.
காலை 11.48 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 372.06 புள்ளிகள் அதிகரித்து 62,244.68 புள்ளிகளில் வர்க்கமாகி வருகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108.90 புள்ளிகள் உயர்ந்து 18,430.05 புள்ளிகளில் உள்ளது.
ரிலையன்ஸ், மாருதி, டெக் மஹிந்திரா, யுபிஎல், டாடா நுகர்வோர் தயாரிப்புகள் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
Leave A Comment