• Login / Register
  • மேலும்

    45 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம்

    நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையாகிறது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,576-க்கு விற்பனையாகிறது.

    இதேபோல், வெள்ளி கிராமுக்கு 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,200 ஆக இருக்கிறது.

    Leave A Comment