• Login / Register
  • மேலும்

    உடலுக்கு குளிர்மை தரும் வெள்ளரிக்காய் சாலட் - செய்முறை இதோ!

    கொளுத்தும் வெயிலில் உடல்சூட்டை குறைக்கவல்ல உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. முக்கியமாக உடலுக்கு குளிர்மை தரக்கூடிய வெள்ளரிக்காய் கோடைகாலத்திற்கு உகந்த ஒன்று.. வெள்ளரிக்காயை பல வகையிலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அதில் ஒன்றுதான் வெள்ளரிக்காய் சாலட், வெள்ளரிக்காய் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையானவை:

    வெள்ளரிக்காய் - 2 

    தக்காளி - 1 

    வெங்காயம் - 1 

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
     
    சாட் மசாலா - 1 டீஸ்பூன் 

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 

    கொத்தமல்லி - சிறிதளவு 

    கருப்பு உப்பு - தேவையான அளவு 


    செய்முறை:

    வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

    பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

    இப்படி சில நொடிகளிலேயே வெப்பகாலத்தில் உடலுக்கு நன்மைதரும் வெள்ளரிக்காய் சாலட்டை தயாரித்துக்கொள்ளாம்.

    Leave A Comment