• Login / Register
  • மேலும்

    உங்களிடம் ரூ.2,000 நோட்டு உள்ளதா?; மாற்றுவது எப்படி?

    புழக்கத்தில் எள்ளரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி நேற்று அறிவித்தது.

    ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

    செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தகைய நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் மட்டுமல்லாமல் ஆா்பிஐ-யின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகளுக்கு சில்லறை மாற்றலாம்.

    சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.

    வாடிக்கையாளா் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், எந்த வங்கியின் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கணக்கு இல்லாமலும் ரூ.20,000 வரையில் மாற்றலாம்.

    ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ஆா்பிஐ உத்தரவிட்டுள்ளது. மற்ற ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு, மக்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உள்ளது.


    Leave A Comment