• Login / Register
  • மேலும்

    2023ம் ஆண்டுக்கான புதுமை விவசாயி கௌரவத்தை பெற்ற விருதுநகர் விவசாயி!

    விருதுநகரை சேர்ந்த சிவக்குமார் என்ற விவசாயி மத்திய அரசின்  2023ம் ஆண்டுக்கான புதுமை விவசாயி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

    விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவர் சிறுதானியங்களை தானே உற்பத்தி செய்து அதை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சிறுதானியங்களை மக்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் வகையில் சிறுதானிய பிஸ்கட், சிறுதானிய சாம்பார் மிக்ஸ், பொங்கல் மிக்ஸ் என தயாரித்து சிறுதானிய உணவுப்பொருட்களை மக்களிடம் எடுத்து செல்கிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்த பின்னர், இவரின் புது முயற்சியை கண்டறிந்த மத்திய அரசு இவருக்கு 2023ம் ஆண்டுக்கான புதுமை விவசாயி என்ற விருது வழங்கி கௌரவித்தது. 

    இதுபற்றி பேசிய சிவக்குமார், “சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் மக்கள் பலர் சிறுதானியங்களை தற்போது தேடுகின்றனர். எனவே அனைவரும் கட்டாயம் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” மேலும் அவரது உற்பத்திபற்ற  பேசிய சிவக்குமார், “பொதுவாகவே பொதுமக்களுக்கு சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவு. அதனால் தான் அவர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து வருகிறேன். நான் தயாரித்த சிறுதானிய சாத கலவைகளில் ஏற்கனவே தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. நாம் அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தாலே போதும்” என்றார்.



    Leave A Comment