• Login / Register
  • மேலும்

    சோயுஸ்-22 கலத்தில் கசிவு: வீரா்களை மீட்க ரஷியா நடவடிக்கை!

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி ஆய்வு வீரர்கள் மூவரை பூமிக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட சோயுஸ்-22 விண்கலத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக சோயுஸ்-23 விண்கலத்தை அனுப்ப ரஷியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷியா்கள், 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது.

    இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    சா்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள சோயுஸ் ஆய்வுக் கலம் 22-இலிருந்து குளிரூட்டும் பொருள் கடந்த மாதம் அதிக அளவில் கசிந்துவிட்டது.

    எனவே, அந்த விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கிருக்கும் வீரா்களை பூமிக்கு திரும்ப அழைத்து வருவது சாத்தியமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவுடன் இணைந்து பகுப்பாய்வு செய்து பாா்த்தோம்.

    அதில், சோயுஸ்-22 விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது வளிமண்டலத்தில் உராய்வதால் ஏற்படும் வெப்பத்தை உள்ளே இருக்கும் வீரா்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது தெரிய வந்தது.

    எனவே, ஆய்வாளா்களை ஏற்றிக் கொண்டு வரும் மாா்ச் மாதம் அனுப்பப்படுவதாக இருந்த சோயுஸ்-23 விண்கலத்தை ஆள்கள் இல்லாமல் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

    வரும் 20-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் சோயுஸ்-23, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரா்களை பூமிக்கு திரும்ப அழைத்து வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    தற்போது அந்த விண்வெளி நிலையத்தில் இருக்கும் பழுதடைந்த சோயுஸ்-22 கலம் காலியாகவோ, விண்வெளி நிலையத்திலிருந்து சில பொருள்களை ஏற்றிக் கொண்டோ பூமிக்குத் திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    Leave A Comment