• Login / Register
  • சினிமா

    சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்..!

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடரில்  சினிமா கதாநாயகன் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இந்தத் தொடரில் நடிகை ஷபானா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான வெற்றித்தொடரான செம்பருத்தியில் நடித்து மக்களிடம் புகழ் பெற்றவர். ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்துவருகிறார். 

    இந்தத் தொடரில் நடிகர் அரவிந்த் ஆகாஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். திரைப்படங்களில் நட்புக்காக நடிப்பதைப்போன்று தொடரிலும் நடிக்கிறார்.  இவர் வெங்கட் பிரபு படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 



    மிஸ்டர் மனைவி தொடருக்கு முன்பு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அபியும் நானும் தொடரில் அரவிந்த் ஆகாஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment