எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஓசிடி மன நோய் : விஷால்!
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா,
மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார்.
இந்நிலையில் விஷால் நேர்காணல் ஒன்றில், “நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஓசிடி பிரச்னை உள்ளது. ஒருமுறை காட்சிக்காக மது அருந்த பயன்படுத்திய கிளாஸ் கழுவி விட்டதா என உதவியாளரிடம் கேட்க அவரோ புதியது என்பார். அது கழுவப்பட்டதா இல்லையென்று கேள்விகள் கேட்டு தொல்லை செய்தார். பின்னர் அவர் கண் முன்பாகவே கழுவப்பட்டது. இன்னொருநாள் படப்பிடிப்பில் அவர் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் உதவியாளர் ஒருவர் பயன்படுத்தியது என்று வேண்டுமென்றே பொய் சொல்லிவிட்டேன். உடனே உதவியாளர்களை அழைத்து மிகவும் கோபமடைந்து விட்டார். பின்னர் இயக்குநரும் நானும் பொறுமையாக விளக்கினோம். பின்பு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு நடித்தார்” எனக் கூறினார்.
ஏற்கனவே பொம்மை பட நிகழ்ச்சியொன்றிலும் எஸ்.ஜே. சூர்யா தனக்கு ஓசிடி பிரச்னை இருப்பது நண்பர்களுக்கு தெரியும் எனக் கூறியிருப்பார்.
ஓசிடி என்பது அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. இதில் பல வகைகள் இருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவிற்கு இருப்பது தூய்மை குறித்தான பயம். பொருள்களை அதிகம் முறை கழுவிக்கொண்டே இருப்பார்கள்.
Leave A Comment