• Login / Register
  • சினிமா

    அருங்காட்சியகத்தில் அஜித் ஓட்டிய பைக்..!


    நடிகர் அஜித் ஓட்டிய பைக் ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளது.

    ஏவிஎம் நிறுவனத்தைச் சாா்ந்த எம்.எஸ்.குகன் சேகரித்த 45 பழைமையான காா்களும், 20 இருசக்கர வாகனங்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஓட்டும் பைக்குகள் எப்போதுமே கவனம் பெறும் வகையில் இருக்கும்.

    அந்த வகையில், திருப்பதி படத்தில்  நடிகர் அஜித் ஓட்டிய பைக் (பாஜாஜ் பல்சர் 180சிசி 2004) ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளதாக ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்டுடியோவில் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்கிற பெயரில் பாரம்பரிய திரைப்படக் கருவிகள் மற்றும் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான திரைப்படக் கேமராக்கள், எடிட்டிங் யூனிட்டுகள், புரொஜெக்டா்கள், லைட்டுகள், பெரும் நடிகா்கள் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள், ஏவிஎம் தயாரித்த படங்களின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


    Leave A Comment