• Login / Register
  • சினிமா

    பிக் பாஸ் -7; ஒளிபரப்பு தேதி அறிவிப்பு

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாக கமல் கூறும்  முன்னோட்ட விடியோ வைரலானது.

    பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதளங்கள் தகவல்கள் பரவி வருகிறது.

    அதன்படி, பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர் பிக் பாஸ் விட்டுக்கு செல்வார் எனக் கூறப்பட்ட நிலையில் அதற்கு அவர்  மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் வீட்டுக்குள் பாவனா, பாடகி ராஜலட்சுமி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு,  மாகாபா ஆனந்த், இந்திரஜா ஷங்கர், தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் பிரித்விராஜ்(பப்லு) ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

    இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    Leave A Comment