வெளியீட்டு தேதியை மாற்றிய சலார் படக்குழு !
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸின் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.
இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்பாராத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை என்றும், வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சலார் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Leave A Comment