• Login / Register
  • சினிமா

    அக்‌ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை: ரசிகர்கள் மகிழ்ச்சி

    நடிகர் அக்‌ஷய் குமாருக்கு  இந்திய குடியுரிமை கிடைத்துள்ளதாக  சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்‌ஷய் குமார். 55 வயதாகும் இவர்,  கனடா நாட்டுரிமை கொண்டவர். 

    இதற்காக அக்‌ஷய் குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இந்திய நாட்டு குடியுரிமை கிடைத்துள்ளதாக நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பான ஆவணங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த செய்தியை ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


    Leave A Comment