• Login / Register
  • சினிமா

    20 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையவுள்ள நடிகை; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    20 வருடங்களுக்கு பின் விஜயுடன் இணைந்து ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 



    இப்படத்திற்கு ‘சிஎஸ்கே’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்க படக்குழு ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இறுதியாக 20 வருடங்களுக்கு முன் விஜய் - ஜோதிகா திருமலை படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment