• Login / Register
  • சினிமா

    காணாமல் போன நடிகர் மரப்பெட்டிக்குள் பிணமாக மீட்பு!

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் "ஜெஃப்" என்று அழைக்கப்படுகிற ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா. கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காணாமல் போனார். 

    இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மரப்பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இறந்து போனது நடிகர் ஜெபர்சன் என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவரது கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டிருந்தது கைகளும் கட்டப்பட்டிருந்தன. அவரது உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம் ஊற்றப்பட்டிருந்தது. 

    எனவே அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காவல் துறை தரப்பில் உறுதி செய்யப்படும்.

    Leave A Comment