• Login / Register
  • சினிமா

    பிரபல சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை; சோகத்தில் சின்னத்திரை

    பிரபல சீரியல்களான  வாணி ராணி, செவ்வந்தி போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ஓ. என். ரத்தினத்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.என். ரத்தினத்தின்  மனைவி பிரியாவே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே சிறிய குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், ஊரிலிருந்து வந்த மகன்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையம் சென்றிருந்த நேரத்தில், பிரியா வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

    பிரியாவின் மறைவுக்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
     

    Leave A Comment