• Login / Register
  • சினிமா

    விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது; எந்த படத்திற்கு தெரியுமா?

    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் லியோ படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இந்த நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது. மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

    லியோவை அடுத்து விஜய்  வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படமாக இது உருவாகும் இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் சர்வதேச தரத்துடன் உருவாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


    Leave A Comment