• Login / Register
  • சினிமா

    தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தல் : ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்வு

    தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தலில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.  இயக்குநர்கள் சங்கத்திற்கு தலைவராக இருந்த ஆர்.கே.செல்வமணியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.செல்வமணியின் அணியும், கே. பாக்யராஜ்ஜின் அணியும் மோதின.

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்கள் , உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2600 உறுப்பினர்கள் உள்ளனர்.

    இவர்களில் ஓட்டுப் போட தகுதியான அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் 1900 பேர்.

    இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தபால் ஓட்டுகள் 100 உள்பட 1521 ஓட்டுகள் பதிவாகின.

    மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி ஆர்.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார். 

    இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

    இதன்மூலம், தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும்  பெற்றுள்ளார்.

    Leave A Comment