• Login / Register
  • சினிமா

    மீண்டும் மோடி வெற்றி பெறுவாரா? இமயமலைக்கு எஸ்கேப் ஆன ரஜினி!

    மீண்டும் பிரதமராக மோடி வெற்றி பெறுவாரா...? புதிய இந்தியா பிறக்குமா..? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்காது நடிகர் ரஜினிகாந்த் எஸ்கேப் ஆகியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைபடத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார்.

    கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.

    அப்போது செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அதில், வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது. இமயமலை பயணம் என்பது வழக்கமான ஒன்று தான். அங்குள்ள ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளேன் என்றார்.

    அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்றார்.

    அதை தொடர்ந்து இசை பெரிதா பாடல் பெரிதா என்ற கேள்வி தமிழ் சினிமா உலகில் எழுந்துள்ளதே உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கும் எந்த பதிலும் சொல்லாமல் நோ கமெண்ட்ஸ் என்று சொன்னபடி கிளம்பினார்.

    இதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் நடிகர் ரஜினிகாந்திடம் இமயமலை பயணம், வேட்டையன் படம், அரசியல் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

    அப்போது செய்தியாளர் உங்கள் ஆன்மிக பயணத்திற்கு பின் புதிய இந்தியா பிறக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த பதிலும் தராத ரஜினி வழக்கமான தனது சிரிப்பை மட்டும் ரியாக்ஷனாக கொடுத்து சென்றார்.

    Leave A Comment