மீண்டும் தாய், தந்தையுடன் விஜய்; வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அரசியல் பிரவேசம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் தந்தையுடன் பிரிவு ஏற்பட்டிருந்த நிலையில் தாய், தந்தையுடன் ஒன்றாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகரும் தமிழக முன்னேற்ற கழகத்தின் தலைவருமான விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சமூகவலைத்தள பக்கதில் நேற்றைய தினம் குறித்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அதீத ஆர்வமுடன் இருந்து வந்ததுடன் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தான் அவருக்கும் விஜய்க்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது.
ஆனால் அப்போது அவர் தொடங்கிய அரசியல் பயணத்தை விஜய் கடந்த பெப்ரவரி மாதத்தில் நிறைவேற்றியிருந்தார்.
விஜய் மக்கள் இயகத்தை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக அறிவித்து வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து கட்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இடையே முன்னதாக ஒப்புக்கொண்ட திரைப்படங்களை நடித்து கொடுத்துவிட்டு முழு நேர அரசியலுக்கு திரும்பி 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயற்படப்போவதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் அதிகம் வசூலிக்கும் படங்களில் விஜய் நடிக்கும் படங்கள் முதல் இடத்தில் இருந்து வருகின்றன.
கடைசியாக வெளிவந்த விஜய்யின்லியோ திரைப்படம் சுமார் 650 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
தற்போது அவர் கோட் (GOAT – Greatest of All Time) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
2003 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு பின்னர் யுவன் சங்கர் ராஜா விஜய் உடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, விஜய் அறிவித்தது போன்று மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அத்திரைப்படமே அவரது கடைசி படமாக இருக்கும் என்பதால் அது தொடர்பான தகவல்களுக்காக ரசிகர்கள் பெரும் கவலை நிறைந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது தாய், தந்தையை விஜய் சந்தித்துள்ளமை வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இன்று... என தலைப்பிட்டு குறித்த புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சமூக வலைத்தள பகத்தில் நேற்றைய தினம் (மே27) பதிவிட்டுள்ளார்.
விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா ஆகியோருடன் இணைந்து எடுத்த குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிக்கிடத்தக்கது.
Leave A Comment