போக போக புரியும்... அரசியல் வருகை தொடர்பில் பரபரப்பு பதில்!
நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கியதுடன் நேரில் வீடு தேடிச் சென்று ஊக்கத்தொகையினையும் வழங்கியுள்ள சம்பவம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
ராகவா லாரன்ஸ் இவ்வாறு தேடிச் சென்று உதவிகளை வழங்கிவருகின்றமை அரசியல் வருகைக்கான முன்னோட்டமா என்ற கருத்துகளும் உலாவரும் நிலையில் போக போக புரியும்... என அதற்கு பதில் வழங்கியுள்ளார்.
சமூக சேவையாளராக நீண்டகாலமாக செயற்பட்டு ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் ஆதரவற்றவர்களை அரவணைத்து உயர்த்தி விடும் உன்னத செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் ராகவா லாரன்ஸ் அண்மையில் 12 ஆவது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் கல்லூரி கனவை நனவாக்கியுள்ளார்.
கொருக்குப்பேட்டையை சேர்ந்த வைஷ்ணவி என்ற அந்த மாணவி, 12 ஆம் வகுப்பில் 592 மதிப்பெண் பெற்றும், அவர் விண்ணப்பித்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துள்ளார்.
சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா மூலம் கறித்த தகவல், ராகவா லாரன்ஸ்க்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மாணவியை நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று (26) நேரில் சந்தித்தார்.
இதன்போது அந்த மாணவி விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க வழிவகை செய்ததோடு, மாணவி வைஷ்ணவிக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார்.
இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், நான் அரசியலுக்கு வருவதற்காக இதை செய்கிறேன் என பலரும் எண்ணலாம். ஆனால் போக போக எனது அன்பை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். தேடிச் சென்று உதவிகளை செய்வதில் ஒருவித சந்தோஷம் இருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறினார்.
Leave A Comment