• Login / Register
  • கட்டுரைகள்

    செவ்வாயில் வட்ட வடிவ பாறை கற்கள்: நாசா வெளியிட்டுள்ள படங்கள்

    செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், செவ்வாய்யில் வட்ட வடிவ பாறை கற்கள் கண்டறியப்பட்டுள்ள புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. 

    கடந்த 23ஆம் தேதி ரோவர் கலன் சூப்பர் கேமரா மூலம் புதிய படங்களை அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தில் வட்ட வடிவ பாறைகள் இருப்பதைப் போன்று உள்ளது. பெரிய பாறையைச் சுற்றிலும் சிறிய துண்டுகள் சிதறியவாறு உள்ளது.

    செவ்வாய் கிரகத்தில் பாறைகள் இருப்பதைப் போன்று பல முறை ரோவர் கலன் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. எனினும் டோனட் வடிவில் நடுவில் வெற்றிடமாக உள்ள பாறை கற்களை முதல்முதலில் நாசாவுக்கு கிடைத்துள்ளது. 

    Leave A Comment