திருப்பதி ஏழுமலையான் தங்க தேரோட்டம் இன்று..!
கோலமாக நடந்து வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது. இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 72,650 பேர் தரிசனம் செய்தனர். 27,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது. பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
Leave A Comment