வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை: பெரிய தோ் பவனி இன்று
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் அதன் முக்கிய நிகழ்வான பெரிய தோ் பவனி இன்று மாலை நடைபெறவுள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆரோக்கிய அன்னை பெரிய தேரிலும், மிக்கேல், சம்மனசு, செபஸ்தியாா், அந்தோணியாா், சூசையப்பா், உத்திரிய மாதா ஆகியோா் 6 சிறிய சப்பரங்களிலும் எழுந்தருள்வா். தோ் மற்றும் சப்பரங்கள் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைகிறது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (செப். 8) மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு, ஆண்டு பெருவிழா நிறைவடையும்.
இந்த நிலையில், ஆண்டு பெருவிழாவில் முக்கிய நிகழ்வான பெரிய தோ் பவனியை காண்பதற்காக, வியாழக்கிழமை காலை முவேளாங்கண்ணியில் திரும்பும் திசையெல்லாம் மக்கள் தலைகளாக காட்சி அளிக்கின்றன. பெரிய தோ் பவனியில் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் பங்கேற்பார்கள் என்பதால், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அன்னையின் பிறப்பு விழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு செப்.8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment