• Login / Register
  • ஆன்மிகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை: ஆண்டுப் பெருவிழா ஆரம்பம்

    உலகப் புகழ் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    பசலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது. பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    நிகழாண்டு ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியாக ஊர்வலம் பேராலய வளாகத்தை சென்றடைந்தது.

    தொடர்ந்து, தஞ்சை முன்னாள் ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் எல்.சகாயராஜ் ஆகியோர் தலைமையில், பாரம்பரியமுறைப்படியான வழிபாடுகளை நடத்தி கொடியைப் புனிதம் செய்வித்தனர். மாலை 6.40 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் பெருவிழாவிற்கு வந்திருந்தால், நாகை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    Leave A Comment