திருப்பதி வசந்த உற்சவம்; நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியீடு
திருப்பதி வசந்த உற்சவத்திற்க்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியீடப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
Leave A Comment