திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று ஆரம்பம்!
திருவள்ளூர் : திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது இதைத்தொடர்ந்து உற்சவர் தீர்த்தீஸ்வரர் காலை 9 மணிக்கு சப்பரம் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இரவு சிம்ம வாகன வீதி உலா நடைபெறுகிறது.பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ராவணேஸ்வர வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. 2-வது நாளான நாளை காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
3-வது நாளான வருகிற 19-ந் தேதி இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் நாள் 21-ந் தேதி இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம், 23-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான வருகிற 24-ந்தேதி இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Leave A Comment