சபரிமலை ஐயப்பன் கோயில் : நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.பங்குனி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. மாா்ச் 19-ஆம் தேதி இரவு 10.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
மாா்ச் 15 முதல் 19-ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம், மலா் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
மாா்ச் 19-ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்குப் பின் ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பக்தா்கள் நடைமுறையில் உள்ள வழக்கத்தின் படி இணையத்தின் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.
Leave A Comment