• Login / Register
  • ஆன்மிகம்

    புனித ஹஜ் பயணம் : ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான திகதி நீடிப்பு!

    புனித ஹஜ் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிபபதற்க்கான திகதி  நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை 20.03.2023 வரை நீட்டித்துள்ளது.

    ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் 'HCol' செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

    தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20.03.2023 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 03.02.2024 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் 'படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)-ஐ தொடர்பு கொள்ளலாம்" என்று சிறுபான்மையினர் நலத்துறை  தெரிவித்துள்ளது.

    Leave A Comment