• Login / Register
  • ஆன்மிகம்

    தவக்கால ஆரம்பம் : புதுச்சேரியில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள்!

    சாம்பல் புதன் நாளையொட்டி 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

    புதுச்சேரியில் இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரெஞ்சு காலத்து இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பங்கு தந்தை குழந்தைசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. 

    இதேபோல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள மிகவும் பழைமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    அந்த வகையில் ஏப்ரல் 6 ஆம் தேதி புனித வியாழன் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனிதவெள்ளி வருகிறது. அன்றிலிருந்து 3 ஆவது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9 ஆம் தேதி கொண்டாட உள்ளனர்.

    Leave A Comment