நாளை சாம்பல் புதன் : தவக்காலம் ஆரம்பமாகிறது
ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக சிலுவை சுமந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார்.
கிறிஸ்தவர்கள் இதை நினைவு கூறும் விதமாக 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம்.
இந்த நாட்களை ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நாளை ஆகும்.
இந்த நாளில் இருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது.
இந்த தினத்தில் இருந்து சாம்பல் புதன் தினத்தன்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு திருப்பலியின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்படும்.
மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதன் அடையாளமாக இந்த சாம்பல் பூசப்படுகிறது.
இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும்.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார்.
அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும்இ ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.
Leave A Comment