• Login / Register
  • ஆன்மிகம்

    உடன்குடி: தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை விழா ஆரம்பம்!

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா  ஜெயபவனியுடன் தொடங்கியது. 

    இன்றுமுதல்  முதல் தொடர்ந்து நான்கு நாட்களும் தினமும் இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா, 26-ந் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழாஇ 11 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை, 28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது. 

    தொடர்ந்து தங்க நாணயங்கள், சிறப்பு மலர்கள் வெளியீடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனைஇ இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும்.

    ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர் தலைமையில் சபையினர் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

    Leave A Comment