• Login / Register
  • ஆன்மிகம்

    மாசி மகம் 2024 | நேரம் மற்றும் சிறப்புகள்!

    பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாசி மகம் திருநாள் இந்துகளால் வெகு சிறப்பான முறையில் விரதமிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாசி மகம் 2024 திருநாள் நாளை 24 சனிக்கிழமை வருகிறது.

    மாசி மகம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை வரும் நிகழ்வாகும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சந்திர பகவான் (பௌர்ணமி) மகம் நட்சத்திரத்தில் உதிப்பதை மாசிமகம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த மாசி மகம் இந்துக்களால் விரதமிருந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    மாசி மகம் நட்சத்திரத்தன்று புனித நீர் நிலைகள், நதிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் நீராடி வர நாம் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

    இவ்வாறு சிறப்பு நிறைந்த திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக இந்த குறிப்பிட்ட நாளை மாசி மகம் என்று அழைக்கிறோம்? இந்த மாசிமக தினத்தன்று பரிகாரங்கள் செய்வதன் மூலம் எவ்வாறு பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்?

    தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அவ்வாறு நாசிக், உஜ்ஜயினி, ஹரித்துவார், பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் கும்பமேளா போன்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    புனித நதியில் நீராடி இறைவனை வழிபடும் அந்த அற்புத திருநாளில் நம் நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல், பல நாடுகளில் இருந்து வருபவர்களும் புனித நீராடி கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த அற்புத நிகழ்வு மாசி மகம் அன்று தான் நடைபெறுகிறது.

    மாசி மகம் - மகாமகம்

    தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மகாமகம் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    மகாமகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும். குருபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திர நாள் அன்று மகாமகம் நடைபெறும்.

    தமிழ்நாட்டில் மகாமகம் என்றும், வட இந்தியாவில் கும்பமேளா என்றும் மிக விமரிசையாக கொண்டாடப்படும் விசேஷமாகும்.

    இவ்வாறான அற்புத தினத்தில் மக்கள் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சிந்து, நர்மதா, காவேரி போன்ற 12 புனித நீர்நிலைகளில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்காகவே இத்திருவிழா நடைபெறுகின்றது.

    இந்த தினத்தில் கடலில் நீராடி வழிபடுவதாலும் பாவங்களிலிருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.

    மாசி மகம் சிறப்புகள்

    மாசி மாத மக நட்சத்திர நாளில் தான் பிரம்மஹத்தி தோஷம் தாக்கிய வருண பகவானுக்கு சிவபெருமான் விமோசனம் அளித்தார். கடலில் ஒளிந்திருந்த வருண பகவானை மீட்ட மாசி மாத நன்னாளன்று கடலில் நீராடுவது அனைத்து சாபங்களையும் போக்கும் என்பது ஐதீகம்.

    தட்ச ராஜன் தனது மனைவி வேதவல்லியுடன் ஒரு முறை யமுனை நதியின் நீராட சென்றிருந்தான். அப்பொழுது தாமரை பூவில் வலம்புரி சங்கு ஒன்றைக் கண்டெடுத்தார். அவர் வலம்புரி சங்கை கையில் எடுத்த உடனே அது அழகான பெண் குழந்தையாக மாறியது. சிவபெருமானே தனக்கு பெண் குழந்தையை வரப் பிரசாதமாக அளித்துள்ளார் என்று அந்த குழந்தைக்கு தாட்சாயணி என்று பெயரிட்டு வளர்த்தார். அம்பிகை அவதரித்த நாள் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

    “மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம்” என்பது ஆன்மிக பழமொழி. அதாவது மகம் ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள்.

    ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசிமகத் திருநாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட அவர்கள் நினைத்த வரம் கிடைக்கிறது.

    மக நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்று அழைப்பார்கள். எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் பித்ருக்களுக்கு பூஜை செய்த பின்னர்தான் துவங்கப்படுகிறது. எனவே மாசி மகம் அன்று பித்ருக்களுக்கு பூஜை செய்வது சிறந்த பலனை கொடுக்கிறது.

    முன்ஜென்மத்தில் செய்த சகல பாவங்கள் அனைத்தும் மாசிமக தினத்தன்று புனித நீராடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கி விடும் என்று நம்பப்படுகிறது.

    மாசி மகம் - 2024 திருநாளின் தேதி மற்றும் நேரம்

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாசி மகம் - 2024 திருநாளின் தேதி மற்றும் நேரம் குறித்து பார்ப்போம்.

    மாசி மாதம் 2024 பௌர்ணமி பிப்ரவரி 24, சனிக்கிழமை அன்று வருகிறது. ஆனால் பௌர்ணமி திதி பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தொடங்குகிறது.

    மாசி மாதத்தில் மக நட்சத்திரம் பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தொடங்கி, பிப்ரவரி 24 சனிக்கிழமை இரவு 11 மணி வரை நீடிக்கிறது.

    மக நட்சத்திரம் பௌர்ணமி திதியும் ஒன்றாக இணைந்து வரும் நாள்தான் மாசி மகம் ஆகும் எனவே இந்த நட்சத்திரம் மற்றும் திதி செயற்கையின் அடிப்படையில் மற்றும் சூரியன் உதயமாகும் பொழுது எந்த நட்சத்திரம் மற்றும் திதி இருக்கிறதோ அந்த நாளில் அதை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என்பதன் அடிப்படையில் சனிக்கிழமை அன்று மாசி மகம் மற்றும் மாசி மாத பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வருகிறது.

    சனிக்கிழமை மாலை வரை பௌர்ணமி திதியும் சனிக்கிழமை இரவு வரை மக நட்சத்திரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மாசி மாதம் 2024 மகம் நட்சத்திரம் நேரம்: பிப்ரவரி 23, 8.40 pm முதல் பிப்ரவரி 24, 11.05pm வரை

    மாசி மாதம் 2024 பௌர்ணமி திதி நேரம்: பிப்ரவரி 23, 4.54 pm முதல் பிப்ரவரி 24, 6.51pm வரை

    Leave A Comment