• Login / Register
  • ஆன்மிகம்

    எந்த வடிவ ஆஞ்சநேயர் என்ன பலன் வழங்குவார்!

    ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் பல நன்மைகள் கிடைக்கும் முக்கியமாக கிரக தோஷங்கள் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். 
     
    தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள்  கிடைக்கும்.

    அவருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை  பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும், வெற்றிலை மாலை சாற்றினால்  திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். 
     
    ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். ராமபிரானின் சேவகன் அனுமனை அவர் அவதரித்த நாளில் வணங்கினால்  தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
     
    ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன.

    எந்த வடிவ ஆஞ்சநேயரை வணங்கினால் என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

    வீர ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

    யோக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.

    பக்த ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    சஞ்சீவி ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.


    Leave A Comment