• Login / Register
  • ஆன்மிகம்

    திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா!

    திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த நவ. 13 ஆம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டிவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது. 

    இதையொட்டி, திருக்கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடா்ந்து .மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது.



    சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மாலை தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார். முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். 

    கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு இடையே சூரனை தனது சக்திவேல் கொண்டு சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    சூரசம்ஹார விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் - வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் வந்திருந்தனர். சுமார் 3,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


    Leave A Comment