குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம்!
குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் இன்று மாலை 4 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாகடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை மாலை மலை அடிவாரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவதை காண சென்னை சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரசம்காரம் நடைபெறும் இடம் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து, சமன் செய்யும் பணிகள் நடை பெற்றது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Leave A Comment