குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல்; உலகளாவிய அவசர நிலை பிரகடனம் - தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!
ஆபிரிக்க நாடுகளை கடந்து குரங்கு காய்ச்சல் (Monkeypox Fever) தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து தடுப்பூசி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆபிரிக்க (Africa) நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவித்து புதிய பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தினால் இந்த பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எம்பொக்ஸ் வைரஸ் திரிபின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம் ஐரோப்பா (Europe) உள்ளிட்ட ஏனைய கண்டங்களிலும் இந்த நோய் தாக்கம் பரவும் அச்சம் உள்ளதாகவும் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்காக இரண்டு தடுப்பூசிகளைச் (Vaccine) செலுத்துவதை விடவும் ஒரு டொப்-அப் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது போதுமானது எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
எம்பொக்ஸ் நோய் பரவலை உலக பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Leave A Comment