புலிகள் காலத்தில் ஒரு விகாரை கூட அழிக்கப்படவில்லை - தேரர் சாட்சியம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் தனித்து செயற்பட்ட காலகட்டத்தில் எந்தவொரு பௌத்த கோயில்கயையும் அழிக்கவில்லை என பௌத்த தேரர் ஒருவர் சட்சியம் வழங்கியுள்ளார்.
யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரரே இவ்வாறு மனச்சாட்சியின் வெளிப்பாடாக உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேரகாணலின் போதே அவர் அத்தகவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கின்ற மக்களுக்கு உண்மை தெரியாது. அது தெரிந்த ஒரேயொரு நபர் நான் மட்டும் தான். நான் இந்த கோவிலை விட்டு எங்கும் போனதில்லை. தமிழ் மக்கள் எல்லோரும் என்னுடன் தான் இருந்தார்கள்.
தமிழ் மக்களை விட்டுவிட்டு நாங்கள் போகவில்லை. அவர்களுடனேயே நாம் தொடர்ந்து இருந்தோம். மற்றது நான் சொல்லப் போவது எல்லோருக்கும் தெரிந்த விடயமோ இல்லையோ என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன்.
ஆரம்பத்தில் இருந்தது தனி தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், டெலோ, விடுதலைப் புலிகள் என எல்லாம் கலந்திருந்தன. அவை கலந்திருந்த காலங்களில் தான் கோவில்கள் உடைக்கப்பட்டன.
அது எல்லோருக்கும் தெரியுமா என தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரியும். ஆனால் அப்படி கலந்திருந்த போது பௌத்த ஆலயங்களை உடைத்தது யாரென்று எமக்கு தெரியாது. அத்துடன் விடுதலைப் புலிகள் என்றும் கூற முடியாது.
ஆனா அதனை உறுதிப்படுத்தும் வகையில் எம்மிடம் ஓர் விடயம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் தனித்து இருக்கும் போது எந்தவொரு பௌத்த ஆலயங்களும் அழிக்கப்படவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால் முற்றாக அழித்திருக்கலாம். இதன்மூலம் மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave A Comment