• Login / Register
  • முகப்பு

    அனைத்து பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

    இலங்கையில் உள்ள அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு நாளை (26) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    க.பொ.த சாதாரணதர பரீட்சை ஆரம்பம்

    எதிர்வரும் 29ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

    க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கு வசதியாகவே நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

    இதற்கமைவாக, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (26) நிறைவடையவுள்ளது.

    12.06.2023 திங்கட் கிழமை முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment