அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுக சட்ட திட்ட விதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கட்சிப் பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சிப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டணைப்படி நடைபெறும்.
வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம் நாள்- வரும் 18(அதாவது நாளை) சனிக்கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை)
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்- (19-03-2023- ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை
வேட்பு மனு பரிசீலனை- 20-03-2023- திங்கட்கிழமை காலை 11 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்- 21-03-2023- செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை.
வாக்குப் பதிவு நாள்- 26-03-2023- ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை- 27-03-2023- திங்கட்கிழமை காலை 9 மணி முதல்
கட்சிப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கட்சித் தொண்டர்கள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 மட்டும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கட்சி சட்டவிதியில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.
கட்சிப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave A Comment