• Login / Register
  • முகப்பு

    ஈரோட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது; வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு - அதிமுக குற்றச்சாட்டு!

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (27) 7.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.

    52 இடங்களில் 238 வாக்குச்சவாடிகள்...

    வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் அவா்களுக்கு வீல் சோ் போன்றவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

    வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளன.

    33 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்பட்டு தீவிர கண்காணிப்பு..

    பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 33 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுஇ வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வாக்குப் பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்.

    நாம் தமிழர் கபட்சி வேட்பாளர் வாக்கு செலுத்தினார்..

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வாக்கை பெரியண்ணா வீதியிலுள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் செலுத்தினார்.

    மாற்றத்துக்காக பெருமகிழ்ச்சியோடு மக்கள் வாக்களிக்க வரவேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வாக்கினை செலுத்திய பின் கருத்து தெரிவித்தார்.

    தேமுதிக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு...

    தேமுதிக வேட்பாளர் ஆனந்த்  கட்சி துண்டுடன் வாக்ச்சாவடிக்கு வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் கட்சி துண்டை அகற்றிவிட்டு வந்து வாக்கு செலுத்தினார்.

    வரிசையில் நின்று வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியர்..

    மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்தார்.

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு போது 5இடங்களில் வாக்குபதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 77வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குபதிவு செய்வதில் எவ்வித சிரமம் ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடியில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வாக்காளர்களுக்கு வாக்கு பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

    அதிமுக குற்றச்சாட்டு...

    இதோநேரம், வாக்காளர்கள் விரல்களில் வைக்கப்படும் மை அழிகிறது என அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.

    களத்தில் 77 வேட்பாளர்கள்....

    இந்த தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.

    Leave A Comment