• Login / Register
  • முகப்பு

    கோவை கார் குண்டுவெடிப்பு; சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் என்ஐஏ சோதனை!

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    கோவை உக்கடம் அருகே கடந்தாண்டுப் அக்டோபர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் பலமுறை செய்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று (15) காலைமுதல் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்தாண்டு அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27), சேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment