• Login / Register
  • முகப்பு

    எம்பி-பதவிக்காகவா காங்கிரஸ் ஆதரவு? - கமல் பதில்!

    எம்.பி. பதவிக்காகத்தான் ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தீர்களாக என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சூசகமாக பதிலளித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவித்திருந்தார்.



    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டிருந்ததுடன், ராகுல்காந்தியுடன் உரையாடலும் நிகழ்த்தி இருந்தார்.



    இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் நிலைப்பாடு தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.



    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் வெற்றிக்கு தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தையும் நியமித்தார்.

    அப்போது எம்.பி ஆவதற்காகதான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏன் எம்பி ஆக கூடாது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆக வேண்டும் என சொன்னதுக்கு கோவிக்காத நீங்கள் ‘மெம்பர் ஆஃப் பார்லிமெண்டு’ என சொல்லும்போது ஏன் கிண்டல் செய்கிறீர்கள்..” என கூறினார். மேலும் அப்படி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    இவ்வாறு பதிலளித்ததன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசையை சூசகமாக தெரிவித்துள்ளாரா கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Leave A Comment