• Login / Register
  • முகப்பு

    ஈரோடு இடைத் தேர்தலை பாமக புறக்கணிப்பு - அன்புமணி!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்   பாமக கட்சி அத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

     தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவும் வழங்கபோவதில்லை என்றும் பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று தெரிவித்தார்.

    மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரையே பேரவை உறுப்பினராக்கிவிடலாம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.

    இவ் இடைத்தேர்தல் தொடர்பாக சனிக்கிழமை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்த நிலையில்,  அன்புமணி பகிரங்கமாக இவ்வாறு  அறிவித்துள்ளார். 

    Leave A Comment