குரு பெயர்ச்சி-2023 | ராஜயோகத்தை அள்ளி வழங்கும் உச்சத்து குரு!
குரு பெயர்ச்சி-2023 இன் மூலம் ராஜயோகம் கிட்டப்போகம் ராசிகள் எது என்பதனை அறிய ஆவலாக உள்ளீர்களா...?
நவக்கிரங்கங்களில் மங்களகரமான கிரகமாக பார்க்கப்படும் குரு பகவான் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் சில ராசிகளுக்கு உச்சத்தில் அமைந்து ராஜயோகத்தை அள்ளி வழங்கப்போகின்றார்.
குருபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நவகிரகங்களின் இடமாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும்.
இதில் நவகிரகங்களில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குரு பகவான் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைந்தார். வருகின்ற டிசம்பர் இறுதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.
இதனால் ராஜயோகத்தை சில ராசிகள் பெறுவார்கள். அந்த ராசியினர் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம்:
குருபகவான் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்க உள்ளார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
மிதுனம்:
குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் குறை இருக்காது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
குரு அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கப் போகின்றார். பணவரவு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
தனுசு:
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி நெருக்கடிகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும்.
Leave A Comment