குரு பெயர்ச்சி பலன்கள் 2023-2024 - கும்பம் ராசியினருக்கு எப்படி?
முழு சுப கிரகமான குரு கிரக பெயர்ச்சி என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதற்கமைவாக இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில்2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 2023 - 2024 ம் ஆண்டு காலப்பகுதி வரையயில் கும்பம் ராசியினருக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படப் போகின்ற பலன்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
கும்ப ராசியினருக்கு இது 2023 ஆம் ஆண்டு ஏற்படும் குரு பெயர்ச்சியால் அவ்வப்பொழுது மருத்துவ ரீதியிலான செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
தங்களின் உழைப்பை சுரண்டி பிறர் லாபம் பெறுவார்கள்.
குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, உறவுகள் முறியும்.
பெண்களுக்கு சோம்பல் தனம் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் விரயங்கள் ஏற்படும்.
மாணவர்கள் மந்த நிலை அடைந்து கல்வியில் பின் தங்குவார்கள்.
அரசியலில் இருப்பவர்கள் சிறை செல்லக்கூடிய நிலை ஏற்படும்.
தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சக கூட்டாளிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பொருளாதார ரீதியில் அதிருப்தி நிலவும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் அவமானங்களை சந்திக்க நேரிடும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
அவிட்டம்: இந்த குரு பெயர்ச்சியால் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
சதயம்: இந்த குரு பெயர்ச்சியால் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
பூரட்டாதி: இந்த குரு பெயர்ச்சியால் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
Leave A Comment