ராகு-கேது பெயர்ச்சி 2023: கெடு பலன்களை அதிகமாக சந்திக்கப்போகும் ராசியினர்!
ராகு-கேது பெயர்ச்சி இந்த ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் மோசமான பலன்களை சில ராசியினருக்கு சந்திக்கும் நிலையேற்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. ராகு மற்றும் கேது கிரகங்கள் 30 அக்டோபர் 2023 அன்று தங்களின் ராசியை மாற்ற உள்ளனது. ராகு கேது ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் அசுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. அதனால் தான் ராகு கேது ஒரு தீய கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, ராகு கேது 30 அக்டோபர் 2023 அன்று திங்கட்கிழமை இரவு 12:03 மணிக்கு மீன ராசிக்குள் நுழைகிறார். அதே நேரம், கேது கிரகம் கன்னிக்குள் நுழையும். எனவே, இந்த காலத்தில் சில ராசிக்காரர்கள் எக்கசக்க எதிர்மறையான விளைவுகளை பெறுவார்கள். ராகு - கேது பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் ராகு-கேதுவின் சஞ்சாரத்தின் போது பொருளாதார பிரச்சனைகளையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், உங்கள் மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும். இது தவிர, பல வகையான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். மனைவியுடனான உறவில் கசப்பு ஏற்படும். கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம்.
ரிஷபம் :
ராகு-கேதுவின் சஞ்சாரம் ரிஷபம் ராசியினருக்கு தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். எனவே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆடம்பரத்தில் அதிகமாக செலவு செய்வீர்கள். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை மோசமாகும். வீட்டில் குழப்பம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்யுங்கள் அல்லது செலவு செய்யுங்கள்.
கன்னி :
ராகு-கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்குக் கஷ்டங்கள் நிறைந்த காலமாக இருக்கும். ராகு-கேதுவின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்தக் காலத்தில் எல்லாத் துறையிலும் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் பலவிதமான பிரச்சனைகள் தலைதூக்கும். அன்புக்குரியவர்களுடன் உறவு மோசமடையவும் வாய்ப்பு உள்ளது. மோதல் பிரச்சனையை ஏற்படுத்தும். பேசுவதில் கவனமாக இருங்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் மாற்றம் சாதகமற்றதாக இருக்கும். இந்த நேரம் சிரமமாக இருக்கும். தொழில், வியாபாரம், வேலையில் பிரச்சனைகள் வரும். கடன் தொல்லைகள் ஏற்படும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை தரப்பிலும் பிரச்சனைகள் வரும். புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள் மற்றும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருங்கள்.
Leave A Comment