• Login / Register
 • சோதிடம்

  இந்த வார ராசிபலன் - ஜனவரி 9 முதல் 15 வரையான பலன்கள்!

  ஜனவரி 09 முதல் 15 ஆம் திகதி வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான பலன்கள்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானமும் செலவும் சரியாக இருக்கும். பண்டிகை காலமல்லவா. செலவுக்கு ஏற்ற வருமானம் வந்தாலே அது மிகப்பெரிய விஷயம் தான். ஆகவே சேமிக்க முடியவில்லை என்ற கவலை வேண்டாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அலுவலக வேலையில் அலட்சியம் கூடாது. மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. சின்ன சின்ன காரிய தடைகள் அவ்வப்போது வந்து போகும். கவலைப்பட வேண்டாம். இந்த வார இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும். ஆன்லைன் பிசினஸில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சூதாட்டம் செய்ய வேண்டாம். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. இழந்த சந்தோஷத்தை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். மனப்பாரம் இறங்கும். நிம்மதியான தூக்கம் வரும். பண்டிகைக்கு வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். விருந்தினர்கள் வந்தால் அவர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். சண்டை சச்சரவுகள் வருவதற்கு சின்ன சின்ன வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெண்கள் மனதிற்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த பாதிப்புகள் விளங்கி படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். வாகனத்தை ஓட்டும் போது ஹெல்மெட் போட்டுக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த பங்கமும் உண்டாகாது. தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. நல்லதும் நடக்கும் அதேசமயம் சின்ன சின்ன சங்கடங்களும் வரத்தான் செய்யும். வருமானத்தில் பிரச்சனை உண்டாகும். பண்டிகை நாட்களுக்கு செலவு செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் பெரிய பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடுத்த மாதம் எல்லாம் சரியாகிவிடும். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதிகப்படியான முதலீடு போட வேண்டாம். பங்குதாரர்களிடம் உஷார். வேலை செய்யும் இடத்திலும் கவனம் இருக்க வேண்டும். அலட்சியமாக எதையும் செய்யக்கூடாது. உங்கள் வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்களுக்கான வேலையை நீங்களே பொறுப்போடு செய்து முடியுங்கள். தினம் தோறும் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நன்மை உண்டு.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிடாதீங்க. எதிராளிகளின் மூலம் பெரிய பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. யாரிடமிருந்தும் கடன் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. மற்றபடி வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை வரம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை தரும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. கொடுக்கல் வாங்கலில் சில சிக்கல்கள் இருக்கும். கடனை திரும்பி வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்குமே தவிர மற்றபடி குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மன நிம்மதி உண்டு. தொழிலில் விரோதிகள் இருந்தால் கூட அவர்களுக்கு நீங்கள் கெடுதல் நினைக்கக் கூடாது. உங்களுக்கே யாராவது துரோகம் செய்து விட்டாலும், அதை மன்னித்து விடுங்கள். தண்டிக்காதீர்கள். வேலை செய்யும்போது பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நெருப்பு கத்தி இவைகளை பயன்படுத்தும் போது உஷார். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த எல்லா நன்மைகளும் கிடைக்கும். வேலையில் பிரமோஷன் கிடைக்கும். சொந்த தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் எல்லாம் சரியாக நடக்கும். அதேசமயம் எதிரிகளின் பிரச்சனையும் அதிகரிக்கும். கூட இருந்தே சில பேர் குழி தோண்டுவாங்க. ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் அலைச்சலின் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் துர்கை வழிபாடு நன்மை தரும். 

  துலாம்:

  துலாம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிரிகளை ஒரே அடியில் விழித்து விடுவீர்கள். உங்களின் முன்னால் நின்று யாராலும் பேச முடியாது. அந்த அளவிற்கு திறமையும் சுறுசுறுப்பும் உங்கள் கூடவே நிற்கும். ஆனால் உடல் அசதி இருக்கும். ரொம்ப நேரம் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலை வேலை என்று குடும்பத்தை விட்டுடாதீங்க. பண்டிகை நாட்களுக்கு குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தை பார்க்க முடியவில்லை என்ற ஒரு சின்ன கலக்கம் மனதிற்குள் இருக்கும். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எடுத்த காரியம் உடனே முடியாது. காரிய தடையால் மனம் வருத்தப்படுவீர்கள். சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ள வேண்டாம். புதியதாக சொத்து வாகனம் வாங்க வேண்டாம். அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். ஆனால் சில பேருக்கு எதிர்பாராமல் அதிர்ஷ்டம் அடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தானாக தேடி வரும் அதிர்ஷ்டத்தை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு உட்காரக் கூடாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும். 

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். கவலைப்படாதீங்க. பண்டிகை நாட்கள் என்று வந்தால் இது எல்லோர் குடும்பத்திலும் சகஜம்தான். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பெயர் புகழ் உயரும். சொந்தத் தொழிலில் உங்களுடைய பேச்சாற்றலினால் வாடிக்கையாளர்களை கவருவீர்கள். தொழிலை பல மடங்கு உயர்த்தி கொண்டு செல்ல போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். இருந்தாலும் மனைவியிடம் வாக்குவாதம் செய்யாதீங்க‌. நிறைய விஷயங்களுக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் விரைய செலவுகள் மருத்துவ செலவுகள் இந்த வார இறுதியில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சங்கடமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நல்லதே செய்தாலும் அது தீமையில் போய் முடியும். செய்யாத தவறுக்கு தண்டனை வாங்குவீர்கள். செய்த நல்லதுக்கு பாராட்டு கிடைக்காது. இப்படி நிறைய பிரச்சனைகள் உங்கள் பின்னால் நின்று கொண்டிருக்கிறது. நீங்கள் ஓரமாக ஒதுங்கி நின்றாலும், உங்களை இழுத்து சண்டைக்குள் விடுவார்கள். என்ன செய்வது சில நேரம் விதி அப்படித்தான் வேலை செய்யும். கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. முன்கோபம் இருக்கக் கூடாது. இந்த வாரம் கொஞ்சம் அப்படி இப்படி தான் செல்லும். இருந்தாலும் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். குடும்பத்தோடு வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த பொருட்களை தானமாக வாங்கி கொடுங்கள். பசு மாட்டிற்கு சாப்பிட வாழைப்பழம் கொடுங்கள் நல்லது நடக்கும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம் ஆகத்தான் இருக்கப்போகின்றது. எதிரிகள் துரோகிகள் விரோதிகள் என்று நினைத்தவர்கள் கூட உங்களுக்கு நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். ஆனாலும் முழுமையாக எல்லோரையும் நம்பி விடாதீங்க. எல்லோர் மீதும் ஒரு கண் இருக்கட்டும். குடும்பத்தில் சுப காரியம் நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம் என்று படிப்படியான முன்னேற்றத்தை காண்பீர்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கவே கூடாது. திரும்பவும் கொடுக்க முடியாத சூழ்நிலை உண்டாகிவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. வேலையில் சிக்கல், தொழிலில் சிக்கல், குடும்பத்தில் சிக்கல், வருமானத்தில் சிக்கல், இப்படி சிக்கலில் இருந்து வெளிவருவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் கூடிய சீக்கிரம் நீங்கள் அந்த சிக்கலை எல்லாம் அவிழ்த்து விடுவீர்கள். கூடுதல் முயற்சியை மேற்கொண்டால் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம். பிரச்சனைகளை கண்டு மனம் சோர்ந்து உட்காராதிங்க. சுறுசுறுப்பு மட்டுமே இப்போது உங்கள் கையில் இருக்கும் ஆயுதம். சுறுசுறுப்பையும் நம்பிக்கையையும் இருக்க பற்றி கொண்டால் உங்களை வெல்ல இந்த உலகத்தில் வேறு யாருமே கிடையாது. உங்களுக்கு உதவியாக, உங்களுடைய வாழ்க்கை துணை இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தினம் தோறும் அரச மரத்தடி விநாயகரை வலம் வர வேண்டும்.

  Leave A Comment